• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவைச் சேர்ந்த 13 பேர் திடீர் மாயம்.

July 9, 2016 tamil.oneindia.com

நாம் வாழ்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் உலகில் வன்முறை அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது. தற்போது இனவெறி எங்கும் தலைவிரித்து ஆடுவதைப் பார்க்கும் போது கவலையாகவும் சில நேரங்களில் பயமாகவும் இருக்கிறது.

மக்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பற்ற கொடூரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் நிச்சயம். வாலிபர்கள் தீவிரவாத இணைப்புகளில் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் சுமார் 13 பேர் திடீரென காணாமல் போனதை அடுத்து அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத கும்பலில் சேர்ந்து விட்டார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் காசர்கோட் மாவட்டத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அரபு நாட்டுக்கு மத கல்வி பயிலச் சென்ற பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், என்று 13 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

அவர்களது குடும்பத்தார் இதுபற்றி முதல்வர் பினராயி விஜயனிடம் முறையிட்டுள்ளனர். காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சலாம், ஹசீசுதீன் உட்பட 9 ஆண்கள், 4 பெண்கள், ஒரு குழந்தை, ஒரு கைக்குழந்தை என 13 பேர் கடந்த மாதம் மத கல்வி நோக்கத்திற்காக அரபு நாடு செல்வதாக கூறிச் சென்றுள்ளனர்.

ரம்ஜானுக்கு அவர்கள் கேரளா திரும்ப வேண்டியிருந்த நிலையில், காணாமல் போனவர்களிடம் இருந்து, உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம், தாங்கள் ஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. எங்கள் இறுதி இலக்கை அடைந்துவிட்டோம் என ஒருவர் தனது உறவினருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

சுமார் 13 பேரும் துபாய் மூலமாகவோ அல்லது இலங்கை சென்றோ தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிக்கு சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆட்சி நடக்கிறது, நீங்களும் இங்கு இணைந்துவிடுங்கள் என்று மாயமாகியுள்ள இளைஞர் ஒருவரின் செல்போன் எண்ணில் இருந்து அவரின் கேரள உறவுக்காரர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது.

மாயமானவர்கள் தீவிரவாதிகளாகி விட்டார்களா, அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்களா
என்பது குறித்த தகவல்களை விசாரிக்கக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சமீப காலமாக, கேரளாவில் பலர் தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க