• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு!

November 15, 2018 தண்டோரா குழு

காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்திற்கும்,கர்நாடகத்திற்கும் ஜீவநதியாக விளங்கி வருவது காவிரி. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது.கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ளது.

இந்நிலையில்,பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில்,மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும்.அந்த அருங்காட்சியகத்தின் உச்சியில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கதீர்மானிக்கப்பட்டது.

மேலும்,அப்பகுதியில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு இந்த சிலையும்,அருகாமையில் 360 அடியில் கண்ணாடியால் ஆன இரு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் காவிரி தாய்க்கு சிலை நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க