• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘செல்பி’ மோகத்தால் நண்பனை இழந்த மாணவர்கள்

September 26, 2017

கர்நாடகாவில் சக மாணவர் குளத்தில் மூழ்கி உயிர் இழந்ததை கவனிக்காமல் கல்லூரி மாணவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ராவகுடுலு என்ற இடத்தில் குந்தன்ஜெயா கோவில் அருகே கடந்த ஞாயிற்று கிழமை, நேஷனல் கல்லூரியின் என்.சி.சி., பிரிவு மாணவர்கள் பயிற்சிக்காக சென்று இருந்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்த ஒரு குளத்தில் குளித்து விட்டு அதன் அருகே நின்று, மொபைல் போன் மூலம், செல்பி எடுத்தனர்.

அப்போது, நிவாஸ் என்ற மாணவர் அவர்களை விட்டு பிரிந்து குளத்தின் மைய பகுதிக்கு சென்று விட்டார். எனினும், சக மாணவர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வத்துடன் இருந்தால் மாணவர் நிவாஸ் குளத்து நீரில் மூழ்கி இறந்தார்.

பின்னர் செல்பி எடுத்த பிறகே, மாணவர் நிவாஸ் நிலை குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் தங்கள் தவறை மறைக்க, மாணவர் நிவாஸ் கால் தவறி குளத்தில் விழுந்து இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

ஆனால், கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள், மாணவர்களின் செல்பி போட்டோவை வைத்து உண்மையை கண்டுபிடித்தனர். அதில் நிவாஸ் குளத்து நீரில் தத்தளிக்கும் காட்சி கூட, செல்பி போட்டோவில் பதிவாகியுள்ளது. ஆனால், மற்ற மாணவர்கள் இதை கவனிக்கவில்லை.கர்நாடகாவில் தற்போது இந்த மாணவர் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க