September 26, 2017
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில் தேவ். இவரது தலைமையில் தான் முதன் முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் கபீர்கான் கபில்தேவ் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளாராம், இதற்கு அவர் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

இதற்கிடையில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர்சிங் இப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இப்படத்திற்கு 1983 பெயரிடப்பட்டுள்ளது.