• Download mobile app
06 Dec 2025, SaturdayEdition - 3587
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீண்ட சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய உலகநாயகன்

August 4, 2016 தண்டோரா குழு

கமலின் பட்ஜெட் படமான சபாஸ் நாயுடு கடந்த மாதம் அமெரிக்காவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. பின்னர் சென்னை திரும்பிய உலக நாயகன், அடுத்த கட்ட படப்பிடிப்புக்குச் செல்வதற்கான ஆயத்த பணிகளை ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் இருந்தவாறு செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி அலுவலக மாடியில் இருந்து இறங்கி வரும் போது எதிர்பாராத விதமாகப் படிக்கட்டில் தவறி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் கால் முட்டி உள்ளிட்ட இரு இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று முன்தினம் எழுந்து நடக்கத் தொடங்கியதாக டிவீட் செய்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு சந்தோசமான நிகழ்வாக, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் உலகநாயகன்.இதனிடையே மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்னும் ஒரு மாத கால ஓய்வு தேவைப்படுவதாகவும், இதனால் அதன் பின்னரே பட வேலைகளைச் செய்யமுடியும் எனவும் அவரது அலுவக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க