October 28, 2017
தண்டோரா குழு
சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன் நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து” என்று பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ட்விட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்தநிலையில், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் வகையில் கமல் இன்று காலை எண்ணூர் துறைமுகத்திற்கே சென்று ஆய்வு செய்தார்.அதோடு சென்னை எண்ணூர் பகுதி மக்களிடம் அங்குள்ள பிரச்னைகள் குறித்தும் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
அவருடன் இணைந்து சமூக ஆர்வலர் நித்யானந்த் அவர்களும் உடன் சென்றிருந்தார்.மேலும், கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல்கழிவுகளை கொட்டுவதாக கமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.