August 31, 2018
தண்டோரா குழு
நடிகர் கமல் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி சாத்தூரில் சைக்கிள் பேரணி நடந்தது.இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா வழியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.ஆனால் எதிர்க்கட்சிகள் அரசு மீது வீண் பழி சுமத்தி பொய் பிரசாரம் செய்கிறது.அதனை முறியடிக்கவே அ.தி.மு.க. சைக்கிள் பேரணி நடத்துகிறது.இதனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.மேலும், நடிகர்கள் ஆசைப்பட்டு அரசியலுக்கு வருகிறார்கள்.எத்தனை நடிகர்கள் கட்சிகளை தொடங்கினாலும் தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் ஆளும்.எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை.திருப்பரங்குன்றம் அம்மாவின் கோட்டை.அங்கு அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.அழகிரி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல,எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட மாட்டார்.ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை”இவ்வாறு பேசினார்.