• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகாந்திரம் இருந்தால் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம் – உயர் நீதிமன்றம்

November 24, 2017

இந்து தீவிரவாதம் விவகாரத்தில் கமல் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் சென்னை போலீஸ் கமிஷனர் வழக்குப்பதியலாம் என உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

வார இதழ் ஒன்றில் நடிகர் கமலஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்.இதனால் இந்து தீவிரவாதம் என பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது தேச துரோக வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவர் மனு தாக்‍கல் செய்தார்.

இந்து மக்‍களுக்‍கு எதிராக கமல்ஹாசன் தெரிவித்திருந்த கருத்து, இந்துக்‍களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தீவிரவாதம் என கமல்ஹாசன் கட்டுரை எழுதிய விவகாரத்தில், விசாரணை நடத்தி ஆதாரமிருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க