• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயாராகுங்கள் நவம்பர் 7ம் தேதி மொத்தமும் சொல்கிறேன் – கமல்ஹாசன்

October 26, 2017 தண்டோரா குழு

பிரபல வார இதழில் தொடர் எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், நவம்பர் 7-ந்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தனது அரசியல் பிரவேசம் பற்றி பல விஷயங்களைதெரிவித்து வருகிறார். இதற்கிடையில் அவர் தனியார் வாரஇதழில் என்னுள் மையம் கொண்ட புயல்! என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி வருகிறார்.

இந்த வாரம் கமல்ஹாசன் எழுதியுள்ள கட்டுரையில், நவம்பர் 7ம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட போகிறேன். “நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.மேலும், “இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க