• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் : தமிழகத்தில் 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

November 14, 2018 தண்டோரா குழு

கஜா புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு விடுமுறையளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது.வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதாகவும்,நாளை (நவ.,15) மாலை பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்ததிருந்தார்.இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் நாகை,காரைக்கால் மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவுதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் திருவாரூர் மற்றும் ராமநாதபுரம்,புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) மதியம் பாம்பன் கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ளது.குறிப்பாக கடலூர் மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் 700 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க