• Download mobile app
27 Oct 2025, MondayEdition - 3547
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கபாலி படத்தின் வெற்றியை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் – ரஜினிகாந்த்

July 27, 2016 தண்டோரா குழு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான கபாலி படம் ஜூலை 22ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான வரவேற்பு கிடைத்தது. இந்த இப்படத்தின் வெற்றி குறித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை வாழவைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ மற்றும் நண்பர் தாணு தயாரிப்பில் பா.இரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததின் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது.

அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஓய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்குத் திரும்பிய எனக்கு ‘கபாலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாகப் பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.

இப்படத்தைத் தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணுவுக்கும், எழுதி இயக்கிய பா.இரஞ்சித்துக்கும், அவருடைய குழுவினர் அனைவருக்கும் சக நடிக நடிகையர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியமாகத் தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க