• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிரம்பி வழியும் கே.ஆர்.பி அணை. வரும் நீர் முழுவதும் வெளியேற்றம்

August 1, 2016 தண்டோரா குழு

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணை நிரம்பியுள்ளதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து விநாடிக்கு 1,059 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்த உயரம் 52 அடியில் 50 அடி நீர் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க