• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரை டன் எடை தூக்கியவருக்கு பரிசு கொடுக்க மருத்துவமனை சென்ற நடுவர்கள்

July 12, 2016 தண்டோரா குழு

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக வலிமையான மனிதர் போட்டியில் இதுவரை யாரும் தூக்காத எடையான அரை டன் அதாவது 500 கிலோ எடையை ஒரே தம்மில் தூக்கி உலக சாதனை புரிந்தார் எடி ஹால்(28) என்ற நபர். இவர் இதற்கு முன் நடைபெற்ற சுற்றுகளில் 465 கிலோ எடையைத் தூக்கியுள்ளார்.

ஆனால் இருவர் அவரது எடையைச் சமன் செய்ததால் புதிய சாதனைப் படைக்க வேண்டும் என நினைத்த அவர் 500 கிலோ எடையைத் தூக்க நினைத்து பயிற்சி செய்ததோடு, போட்டியில் தூக்கவும் செய்தார். அப்போது கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால் சில வினாடிகளில் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது. பின்னர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது மருத்துவக்குழு உடனடியாக வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்குச் செய்யப்பட்ட சில சோதனைகளுக்குப் பின் அவரது மூளைக்குச் செல்லும் நரம்புகளில் சில நரம்புகள் வெடித்து இரத்தம் மூக்கில் வந்துள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்குப் பின் அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார். இது குறித்து அவர் கூறும்போது, எது போன்ற ஒரு சாதனையை செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தேன், செய்து முடித்துவிட்டேன்.

மூக்கில் ரத்தம் வந்தபோது நான் செத்துப் பிழைத்தது போல் இருந்தது. ஆனாலும் இன்னும் சில வருடங்களுக்கு இந்தச் சாதனை வரலாற்றில் இடம்பெறும் என நினைக்கும் பொது பெருமையாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ சாதனை சான்றிதழை மருத்துவமனையிலாவது பெற்றுக்கொண்டாரே அதுவரை சந்தோசமே……..

இதைதான் ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்களோ………

மேலும் படிக்க