• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாச்சியார் பட கேட்ட வார்த்தை சர்ச்சை என்ன செய்தது மாதர் சங்கம்?

November 16, 2017 தண்டோரா குழு

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது.இந்த டீசர் வெளிவந்து 1 மில்லியனை கடந்து ஹிட்ஸ் சென்றுள்ளது.
இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா ‘தே…பயலுகளா’ என்று மிக மோசமான வார்த்தையை பயன்படுத்துகின்றார்.இவை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில்,சிம்புவின் பீப் பாடலுக்கு மட்டும் குரல் கொடுத்த மாதர் சங்கம் இப்பொது எங்கே போனது என சமூக வலைத்தள வாசிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில், அனைத்து இந்திய மாதர் சங்க துணைத்தலைவர் யு.வாசுகி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நாச்சியார் டீசரில் வரும் கெட்ட வார்த்தைக்கு மாதர் சங்கம் என்ன செய்தது என்பது தான் இப்போது டிரெண்டிங் போல! சிம்புவின் கேவலமான பாடலைக் கண்டித்த பின் இந்த கேள்வி எந்த பிரச்சினை நடந்தாலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நோக்கி வீசப்படுகிறது.

கேட்பவர்கள் கேள்வியை முகநூலில் பதிவு செய்வதே மிக பெரும் சமூக சேவையாக நினைத்துவிடுகிறார்கள். சமூக பணி இவ்வளவு சுலபம் என எண்ணுவதே அவர்களின் அறிவு பற்றாக்குறையைக் காட்டுகிறது. இந்த கேள்வியில் சிம்பு பாடலின் வக்கிரம் உட்பட கடந்த காலத்தில் மாதர்சங்கம் எதிர்த்த பலவற்றை குறித்த பொருமலே வெளிப்படுகிறது. நியாயமல்ல என்று நினைப்பதை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அதை விடுத்து மாதர் சங்கத்தை நக்கல் செய்வது, அறிக்கை விட்டோமே என்றால் ஏன் இயக்கம் நடத்தவில்லை என்பது, இயக்கம் நடத்தினோம் என்றால் மீடியாவில் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்பது, போட்டோவை போட்டால் ஏன் போலீஸ் புகார் கொடுக்கவில்லை என கேட்பது…….. இப்படி பட்டியல் நீள்கிறது. எனவே அநீதியை எதிர்ப்பது என்ற அக்கறை ‘மாதர்சங்கம் எங்கே போனது?’ என்ற கேள்வியில் வெளிப்படவில்லை. நிற்க…. நாச்சியார் டீசர் பிரச்சினைக்கு வருவோம்.

தே.. வார்த்தை பெண்ணை இழிவு படுத்தும் வார்த்தை. இதன் பூர்வாங்கத்தை பார்த்தால் ஆணின் கட்டற்ற பாலியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குலம். அந்த வழக்கம் மண்மூடி போவதற்கு பல போராட்டங்கள் நடந்துள்ளன. எனவே யதார்த்தம் என்கிற பேரில் இதை ஏற்க முடியாது.

குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும் போதாவது எந்த பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். டீசரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகாவை சொல்ல வைத்து shock ஏற்படுத்தி விளம்பரம் தேடும் ஏற்பாடு தவிர வேறென்ன? யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல, மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க