• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது

December 20, 2017 தண்டோரா குழு

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல்நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.எனினும், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.

இந்நிலையில்,டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதாவின் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை இன்று(டிச 20) வெளியிட்டார்.

20 நொடிகள் வரை ஓடக்கூடிய அந்த வீடியோவில், அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளும்,தொலைக்காட்சி பார்ப்பது போன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

நாளை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க