• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி பேரனுக்கு சாக்லெட் கொடுத்த ஜெயலலிதா

July 19, 2016 தண்டோரா குழு

ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி இந்தியா முழுவதும் ஜூலை 22ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்தநிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்தின் பேரனுக்கு சாக்லெட் கொடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகம் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று சென்றிருக்கிறார்கள். அப்பள்ளியில் தான் ரஜினிகாந்தின் பேரனும், நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகனுமான யாத்ராவும் படிக்கிறார். நேற்று சென்ற மாணவர்கள் குழுவினருடன் ரஜினியின் பேரனும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்றுள்ளார்.

அப்போது, ரஜினிகாந்த் பேரன் உள்ளிட்ட அங்கு வந்திருந்த மாணவர்களுடன் முதல்வர் ஜெயலலிதா உரையாடியுள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்தின் பேரன் யாத்ரா, கூறும் போது,அம்மா எங்களைக் கூப்பிட்டு சாக்லேட் கொடுத்தாங்க, இது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சி எனத் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க