• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம்

January 13, 2017 தண்டோரா குழு

“பீட்டா”வுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டதாக நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அவரது படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியில், கவாஸ்கர் இயக்கத்தில், ஆர்யா, த்ரிஷா நடிக்கும் “கர்ஜனை” படப்பிடிப்பு நடைபெற்றது. இதனை அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். நடிகை த்ரிஷா பீட்டா அமைப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார் என்று கூறி, எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

பீட்டாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட த்ரிஷா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என போராட்டம் நடத்தியவர்கள் கூறியுள்ளார்கள்.

இதையெடுத்து, தகவல் அறிந்த காரைக்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் திரைப்படக் குழு படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதனை அடுத்து படப்பிடிப்புக்கு உதவிய வாகனத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க