November 11, 2017
ஜெய்ப்பூரிலிருந்து புதுடெல்லிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், விமான ஓட்டுநரின் பணி நேரம் முடிந்த காரணத்தினால் விமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் விமானநிலையத்திலிருந்து நேற்று முன் தினம்(நவம்பர் 9), ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அலியான்ஸ் ஏர்’ மூலம் புதுதில்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தின் ஓட்டுநர், தனது பணி நேரம் முடிந்துவிட்டதால், விமானத்தை இயக்க மறுத்துவிட்டார்.
இதனையடுத்து அந்த விமானத்திலிருந்த பயணிகளை விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு, சிலரை பேருந்து மூலம் புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் சில பயணிகளை அங்குள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். வேறு சிலரை, நேற்று(நவம்பர் 1௦) காலை,வேறு விமானத்தின் மூலம் புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.