• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத ஒப்பந்தக்காரர்களின் ஆட்சியில் வாழ விரும்பவில்லை. இர்ஃபான் கான் விருப்பம்.

July 2, 2016 தண்டோரா குழு

நல்ல வேளை தான் மத ஒப்பந்தக்காரர்கள் ஆட்சி செய்யும் நாட்டில் வாழவில்லை என்று நிம்மதியோடு கடவுளுக்கு நன்றி கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்.

இதற்கு முன்பு ரமலான் மற்றும் முகரம் போன்ற விழாக்களுக்கு நோன்பு நோற்பதைப் பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியதை அறிவோம்.

குளவிக் கூட்டில் கல் எறிந்தது போல் பல இஸ்லாம் இனத்தவரும் இவரது கருத்தை விமரிசித்தனர். மத குருமார்கள் தன்னைப் பயமுறுத்தவில்லை என்பதையும் தெளிவுபடக் கூறினார்.

மதம் என்பது மனிதன் தன்னைத் தானே சுய பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொள்வதாகும். மதம் இரக்கம், ஞானம், சகிப்புத்தன்மை போன்றவற்றைப் போதிப்பதாகும். மிதமான அணுகுமுறையைக் கையாள வேண்டுமேயன்றி வெறிச்செயல் மதக்கோட்பாட்டுக்கு முரணானது.

சடங்குகளின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளாமல் அவற்றைக் கேலிக்கு உள்ளாக்கியிருக்கிறோம். தியாகம் என்பது ஒருவர் மிகவும் மனதார நேசிக்கும் பொருளை மற்றவருக்கு விட்டுக் கொடுத்து அவர்களிடம் பகிர்ந்து கொள்வதாகும்.

ஒரு ஆட்டைக் கடையில் வாங்கி அதைப் பலியிடுவதன் மூலம் இறைவனைத் திருப்தியடையச் செய்ய நினைக்கிறோம். ஆனால் எப்படி மற்றொரு உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் நமக்கு நன்மை கிட்டும்?

மேலும் மொகரம் பண்டிகை துக்கநாளாக அனுஷ்டிக்கப்பட வேண்டுமேயன்றி, ஊர்வல முழக்கங்கள் முரண்பாடதாகும்.

சடங்குகள் மேலும் விழாக்களின் நுணுக்கத்தை அறிந்து கொள்ளாவிடில் அவை தவறாக உபயோகப்பட ஏதுவாகும், என்றும் தனது கருத்துக்களை நடிகர் இர்ஃபான் கான் இணையதளத்தின் மூலம் கருத்து வெளிப்படுத்தியிருந்தார்.

தான் நடித்து வெளிவரவுள்ள 'மாடரி' என்ற திரைப்படத்தின் துவக்க விழாவில் பேசுகையில், முஸ்லீம் மத குருமார்கள் தீவிரவாதத்தைப் பற்றி ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்று வினா எழுப்பியுள்ளார்.

இவருடைய இந்தச் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு இஸ்லாம் இனத்தினரிடமிருந்து பல கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

நடிகர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும், மத விஷயங்களைக் குருமார்களிடம் விட்டுவிடும்படி எச்சரித்துள்ளனர். இத்தகைய கருத்துக்களை சுய விளம்பரத்திற்காக கான் செய்வதாக ஜமாட் இ உலெம இ ஹிண்ட் மாநிலச்செயலர் மௌலன அப்டுல் வஹிட் கற்றி தெரிவித்துள்ளார்.

எந்த வித மத சம்பந்தப்பட்ட ஞானமும் இல்லாத நடிகர் கான் வாயை மூடி மௌனித்திருப்பதே நலம் என்று ஜெய்ப்பூரின் தலைமை நீதியாளர் ஷெர் ஃக்வாசி கலிட் உஸ்மனி கூறியுள்ளார்.

மேலும் படிக்க