October 14, 2017
தண்டோரா குழு
விமானங்களில் வழங்கப்படும் தரமான உணவுகளை போன்று ரயில்களிலும் தரமான உணவுகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தும் விதமாக புதிய வகை உணவுகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது.இதுகுறித்து முடிவு செய்ய 5 மாதங்களுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது.இந்த குழு புதிய உணவு பட்டியலை தயார் செய்து ரயில்வே நிர்வாகத்திடம் அனுப்பியுள்ளது.
இந்த புதிய வகை உணவுப்பட்டியலில் கிரேவி இருக்காது.இது தவிர வெஜ் பிரியாணி, ராஜ்மா சாவல், ஹக்மா நூடுல்ஸ், புலாவ் மற்றும் லட்டோ போன்றவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் உணவு வகைகளை மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் அமல்படுத்தபடும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.