• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆணின் பார்வையில் பெண்மை இறைவி. குவியும் பாராட்டு.

June 3, 2016 தண்டோரா குழு

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று வெளியானது கார்த்திக் சுப்புராஜ்ஜின் இறைவி படம். ஆணின் பார்வையில் பெண்மை குறித்த கருத்தை அழகாகக் கையாண்டிருக்கிறார் என ரசிகர்கள் மத்தியில் அவருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் இறைவி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பெண்ணை இறைவியாகக் காட்டும் படம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சந்தோசமும் சங்கடமும் அவள் கணவனை சார்ந்தே அமைகிறது. ஆனால் அதைக் கணவர்கள் பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதால் நடப்பவற்றை அருமையாக எடுத்துக் கூறும் படமாக இப்படம் உள்ளது. மேலும், படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

ஏற்கனவே, ‘இறைவி’ படம் பெண்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் எனப் படக்குழுவினர் விளம்பரம் செய்திருந்தனர். இதையடுத்து தற்போது இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் பாராட்டுக் கருத்துகளை தெரிவித்தும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்ஜின் இயக்கத்தை வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.

மேலும் படிக்க