• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் போல் மினி ஐபிஎல் பிசிசிஐ அறிவிப்பு.

June 24, 2016 தண்டோரா குழு

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குப் பதிலாக மினி ஐபிஎல் போட்டியை தொடங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

உலக அளவில் உள்ள முக்கிய கிரிக்கெட் கிளப்புகளை கொண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. இருப்பினும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லாததால் மாற்று ஏற்பாடாக வேறொரு போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ தற்போது முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், ஐபிஎல் போட்டியை போல் மினி ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இப்போட்டி ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும், தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும் எனவும், இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும் அமெரிக்கா, அல்லது யு.ஏ.இயில் இந்த மினி ஐபிஎல் தொடர் நடைபெறலாம் எனவும்
பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சையத் முஷ்டாக் அலி டி20 உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்குப் பதிலாக மண்டல அணிகள் அடிப்படையிலான டி20 தொடர் நடத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க