• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தோனேசியாவில் 16 பேருடன் சென்ற விமானம் மாயம்

December 3, 2016 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் 16 பேருடன் சென்ற போலீஸ் விமானம் மாயமானதாக அஞ்சப்படுகிறது. தகவல் தொடர்பு எல்லையிலிருந்து திடீரென்று அது விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் ஜகர்தாவிலிருந்து 16 போலீஸ்காரர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் மேற்கு இந்தோனேசியா பதாம் தீவு அருகில் சென்றபோது அதன் தகவல் தொடர்பு இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.

அந்த பங்க்கா தீவிலிருந்து புறப்பட்ட 50 நிமிடத்தில் தொடர்பிலிருந்து வெளியேறியது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது, எங்கு சென்றது என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என இந்தோனேசிய மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விமானம் மாயமான இடத்தில் தேசிய மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 16 பேருடன் சென்ற போலீஸ் விமானம் திடீரென்று மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க