• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் குற்றவாளியை கைது செய்ய உதவிய இந்தியர்

September 20, 2016 தண்டோரா குழு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த சனிக்கிழமையன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை கண்டுப்பிடிக்க இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உதவியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க காவல்துறையினர் சந்தேகித்தனர்.

இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இதில், ஆப்கான் வம்சா வழியில் வந்தவரான அகமத்கான் ராஷ்மிக்குத் தொடர்பு இருப்பதையும் , அவர் தான் குண்டு வைத்தார் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். உடனே அவர்கள் அந்த குற்றவாளி பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில், நியூயார்க் நகரில் லின்டென் பகுதியில் மதுபான விடுதியை நடத்தி வரும் சீக்கியரான ஹரிந்தர் பைன்ஸ் என்பவர் தன் கடைக்கு அருகில் அகமத்கான் இருப்பதைக் கண்டார். முதலில் அகமத்கானை சரிவர கவனிக்காத அவர், பின்னர் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு, உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

இத்தகவலை அறிந்து, அங்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அகமத்கானை கைது செய்ய முயன்றனர். அப்போது அகமத்கான் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். உடனே காவல்துறை அதிகாரிகள் மறுதாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் அகமத்கானுக்கு குண்டு காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நியூஜெர்சி நகரின் காவல்துறை அதிகாரிகள் அவ்விடுதியில் இருந்து சுமார் மூன்று மைல் துரத்தில் கிடந்த ஒரு பையில் வெடிகுண்டுகள் இருப்பதை கண்டுப்பிடித்தனர்.

குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உதவி செய்த ஹரிந்தர் பைன்ஸ்சை நியூயார்க் போலீசார் பாராட்டி, ” நீங்க தான் உண்மையான கதாநாயகன் ” என்று பாராட்டினர். ஆனால், ஹரிந்தரோ, ” “காவல்துறையும், சட்டத்தைக் காப்பாற்றுபவர்களும் தான் உண்மையான கதாநாயகர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறி, போலீசாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் படிக்க