• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டினியால் வாடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 97-வது இடம்

October 13, 2016 தண்டோரா குழு

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடான இந்தியா, பசி பட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் தரவரிச்சைப்பட்டியலில் 97வது இடம் பெற்றுள்ளது.

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்(International Food Policy Research Institute) 2016ம் ஆண்டிற்கான சர்வதேசப் பட்டினிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.மொத்தம் 118 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 15% பேர் சாப்பிடும் உணவு தரம் மற்றும் அளவில் பற்றாக்குறை, குழந்தைகள் உயிரிழப்பு 4.8%, ஊட்டச்சத்து குறைபாடு என்பது 39% என்ற அளவில் இந்தியா 97வது இடத்தைப் பிடித்துள்ளது.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி விகிதம், மக்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து, வீணாக்கப்படும் உணவு,குழந்தை இறப்பு விகிதம் என 4 விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின் தங்கியுள்ள நாடுகளான பங்களாதேஷ், ஈரான், ஈராக், நைஜீரியா, உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவே மக்கள் பட்டினியில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இந்தியாவை விட அதிக மக்கள் பட்டினியில் வாடுவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், நேபாளம், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

மேலும், இந்த தரவரிசை பட்டியலில் ஆசிய நாடுகளிலேயே இந்தியா தான் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனெனில்,இந்தியா கடந்த 2000ம் ஆண்டில் 83வது இடத்தில் இருந்த இந்திய தற்போது 97வது இடத்தில் உள்ளது.
அதைபோல், சீனா, 29 வது இடத்திலும், வியட்னாம் 64வது இடத்திலும், கம்போடியா 71வது இடத்திலும், நேபாளம் 72வது இடத்திலும், இந்தோனேஷியா, 72வது இடத்திலும், மியான்மர் 75வது இடத்திலும் உள்ளன.

மேலும் படிக்க