• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரக்கமில்லா ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 7 வயது மகள் சடலத்தை தூக்கி நடந்த தந்தை

September 3, 2016 தண்டோரா குழு

ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தீனபந்து கேமுது. இவருடைய மகள் பர்ஷா கீமுது(7). உடல் நலக்குறைவால் மிதாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை மோசமானதால், மல்காங்கிரி மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து, அவரும், அவருடைய மனைவியும் மகளைக் கொண்டு சென்றனர்.

ஆனால், பாதி வழியிலேயே அச்சிறுமி இறந்து விட்டாள். அது தெரிந்தவுடன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், சிறுமியின் உடலுடன் கீழே இறங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், இரக்கமில்லாத அந்த ஓட்டுனர், இவர்களையும், சிறுமியின் உடலையும் கீழே தள்ளிவிட்டுள்ளார்.

அழுது புரண்ட தீனபந்துவும்,அவருடைய மனைவியும் வேறு வழியின்றி மகளின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டனர். தனியார் வாகனங்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு பணமில்லை என்பதால், தீனபந்து அவரது தோளிலேயே பர்ஷாவின் உடலைத் தூக்கி போட்டு அழுத படி நடக்கத் தொடங்கியுள்ளார்.

அவரின் அருகிலேயே, அவரின் மனைவியும் அழுதபடி நடந்து சென்றார். பர்ஷா இறந்து விட்ட சோகம் ஒரு பக்கம் என்றால் அந்தச் சிறுமியின் உடலைக் கூட மரியாதையாகக் கொண்டு செல்ல முடியவில்லையே என்ற இயலாமை மறுபக்கம் என்று அந்த பெற்றோரை உருக்குலைத்து அழச்செய்தது.

மேலும், மகளின் உடலைத் தோளில் சுமந்து கொண்டு தங்கள் கிராமத்தை நோக்கி சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளனர். அப்போது, நடுவே ஒரு கிராமத்தில் சிலர் இதைப் பார்த்து விசாரித்துள்ளனர். உண்மை தெரிந்ததும், அரசு அதிகாரிக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, வேறு வாகனத்தை வரவழைத்து உடலை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்பட 3 பேர் மீது மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.

இதே போல், 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்மணியின் சடலத்தை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் தரப்படாததால், அந்தப் பெண்மணியின் கணவர், சடலத்தை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்றார்.அந்தப் படம் வைரலாகி நாடு முழுக்க கண்டனத்தை பெற்றது.இதையடுத்து இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடனடியாக துவக்கி வைத்தார்.அதேபோல், இப்போது நடந்த சம்பவம் முழுக்க முழுக்க மனிதாபிமானமற்ற செயல் என்பதை மறுக்க முடியாது.

மேலும் படிக்க