November 11, 2017
தண்டோரா குழு
ஜெர்மனியில் ஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் ரயில் சேவை இன்னும் நான்கு ஆண்டுகளில் தொடங்கவுள்ளது.
ஜெர்மனி நாட்டின் வட பகுதியில் உள்ள மக்கள், இன்னும் நான்கு ஆண்டுகளில் ஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதன் ரயில் சேவையை பயன்படுத்த முடியும். இந்த சேவை வரும் 2021ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல்,”Cuxhaven , Bremerhaven , Bremervoerde and Buxtehude “ஆகிய இடங்களுக்கு இடையே ஹைட்ரஜனால் இயங்கும்.இந்த சேவைக்கு ‘Coradia iLint ’ என்று பெயர்.
ஜெர்மனியின் லோயர் சாக்சோனி மாநிலத்தின் ரயில்வே நிறுவனமான LNVGக்கு சுமார் 14
எரிபொருள் ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.மேலும், CorstiaiLint ரயில்கள் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
ஹைட்ரஜன் என்ஜின்கள் நீராவியை மட்டுமே வெளியிடுகின்றன.அதனால்,அவை தூய்மையான போக்குவரத்து வடிவங்களாக கருதப்படுகின்றன. மின்சாரம் இல்லாத ரயில் பாதைகளில், டீசல் மூலம் பயணம் செய்யும் ரயில்களை, இந்த புதிய சேவை மாற்றும் என்று பொறியியளர்கள் தெரிவித்தனர்.