• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்

February 1, 2017 தண்டோரா குழு

மக்களவையில் முதல் முறையாக பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டு ஒன்றாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி புதன்கிழமை தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு “உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். யு.ஜி.சி. எனப்படும் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அங்கீகாரம், தரவரிசை மற்றும் தன்னாட்சி அந்தஸ்தின் அடிப்படையில் கல்லூரிகள் அடையாளம் காணப்படும்.

இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்கில் இந்தியா’ திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாடு முழுக்க 100 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்பட உள்ளன.

ஜவுளித்துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஏற்கெனவே ஒரு சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல தோல் மற்றும் காலணி துறைகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.”

மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மேம்பாடுகுறித்த அறிவிப்பு “கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின் வசதி செய்து தரப்படும். நாடு முழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.

கிராமப்புற சுகாதாரம் 2013-ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் பலமடங்கு அதிகரித்துள்ளது. கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.”

மத்திய பட்ஜெட்டில்தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்குறித்த அறிவிப்பு ”தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 55% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 2016 – 2017 நிதியாண்டில் பெண்களின் பங்களிப்பு 40% ஆக இருந்தது. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். 100 நாள் வேலைதிட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”

மத்திய பட்ஜெட்டில்வேளாண் துறைக்கான அறிவிப்புகள்; “ இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர் கணக்கு அதிகம்.

2017 – 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.

நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும். நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.”
இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க