• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹைடெக் பச்சை குத்துதல் மூலமாக உணர்ச்சிகளைக் கண்காணிக்க முடியும்.

July 20, 2016 தண்டோரா குழு

மின்னணு பச்சை குத்துதல் வாயிலாகத் தசை மற்றும் நரம்பு செல்களின் செயல்பாடுகளை அளவிட முடியும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் கூறியுள்ளது.

முன்பெல்லாம் திருமணமானவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியின் பெயரைப் பச்சை குத்திக் கொள்வது வழக்கம். வேறு சிலர் கடவுளின் பெயரை தங்கள் கைகளில் பச்சை குத்தியிருப்பார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல காதலர்கள் தாங்கள் விரும்பும் நபருடைய பெயரை அவ்வாறு குத்தி இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவ்வாறு பச்சை குத்திக் கொள்வது தற்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இஸ்ரேல் நாட்டில் உள்ள பிரபல டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில், மின்னணு பச்சை குத்துதல் என்ற முறையின் மூலமாகத் தசை மற்றும் நரம்பு செல்கள் செயல்பாடுகளை அளவிட முடியும் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த மின்னணு பச்சை குத்துதல் ஒரு கார்பன் மின் முனையின் மூலம் மனித தோலை இணைகிறது. பின்னர் இதில் இருக்கும் பாலிமர் மற்றும் நானோ தொழில்நுட்பம் மேற்பரப்பில் உள்ள மின்முனையை மேம்படுத்தும்.

மேலும், இது தோல் எரிச்சல் இல்லாமல் வலுவான, நிலையான சிக்னல்களை நீண்ட நேரம் பதிவு செய்யும் திறனை உடையது. இந்த புதிய மின்வாயின் முக்கிய பயன்பாடு என்னவென்றால் மின்சார சிக்னல்கள் மூலம் முக பாவனைகளை கண்காணித்து, மேப்பிங் முக தசைகளின் உணர்ச்சிகளைப் பெற முடியும்.

இந்தக் கண்டுபிடிப்பை மருந்துவம், புனர்வாழ்வு, மற்றும் வணிக சந்தைகளிலும் பயன்படுத்த முடியும் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும் படிக்க