• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் மீண்டும் தடை

September 20, 2016 தண்டோரா குழு

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யபட்ட வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யபட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில்,கடந்த ஞாயிறன்று அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையெடுத்து, ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும் அவரது பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் இரு நீதிபதிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதால் 3வது நீதிபதியின் கருத்தை கேட்க வேண்டியுள்ளது.எனவே, 3வது நீதிபதியின் கருத்தை கேட்கும் வரை ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு மீண்டும் தடை விதித்தது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க