• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெல்மெட் வழக்கு: நாளை தீர்ப்பு

September 19, 2018 தண்டோரா குழு

ஹெல்மெட்,சீட்பெல்ட் கட்டாயம் என்ற விதிகளை அமல்படுத்தக்கோரி கே.கே ராஜேந்திறன் தொடந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின்படி நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம் என்றும்,அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிகள் இருந்தும் அதனை அரசு அமல்படுத்தவில்லை.

இதனை தொடர்ந்து சென்னை கொரட்டூரைச்சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவ்வழக்கினை நீதிபதிகள் மணிக்குமார்,சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது.அப்போது கூறிய நீதிபதிகள்,விதிகளை அமல்படுத்துங்கள் என்று சொன்னால் நீதிமன்றம் கட்டாயப்படுத்துவதாக நீதிமன்றத்தின் மீதும்,நீதிபதிகள் மீதும் திசை திருப்புகின்றனர்.நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் விதிகளை முறையாக அமல்படுத்துங்கள் என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும்,பணியில் இருக்கும் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்கின்றனர்.தேசியக்கொடியுடன் செல்லும் வாகனங்களில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கூட கொடுப்பது இல்லை என்றும்,நாங்கள் நீதிபதியை மட்டும் குறிப்பிடவில்லை,தேசியக்கொடியுடன் வலம் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் குறிப்பிடுகிறோம் என்றனர்.இதனைத்தொடர்து இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கபடும் என்றனர்.

ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி கல்லூரிகளில் மட்டும் ஏற்படுத்துவது போதது எனவும்,ஹெல்மெட்,சீட்பெல்ட் கட்டாயம் என்பதை முதலில் காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறித்தினர்.

மேலும் படிக்க