• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இதயத்தைப் பையில் ஏந்தி வாழும் அதிசய மனிதர்.

June 30, 2016 தண்டோரா குழு

ஸ்டன் லர்கின், டொமினிக்வெ இருவரும் சகோதரர்கள். பரம்பரை வியாதியான இதய நோயால் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள்.

மருத்துவர் ஜொனாதன் ஹஃப்ட், 25 வயதான ஸ்டன் லர்கின்க்கு மிச்சிகனில் (University of Michigan Frankel Cardiovascular center) அறுவை சிகிச்சை செய்தார். இதய மாற்று என்றால் வேறு இதயத்தை அதே இடத்தில் பொருத்துவது.

ஆனால் ஸ்டன்க்கு செய்த அறுவை சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது. இதயத்தை உடலுள் வைக்காமல் வெளியே வைத்து இயங்கச் செய்வது. இதயத்தை ஒரு பையில் வைத்து முதுகில் சுமந்து செல்லலாம்.

டாக்டர் ஹஃப்ட் இத்தகைய சிகிச்சை செய்வதில் நிபுணர். இதய மாற்றுச் சிகிச்சை செய்வதற்கு மாற்று இதயம் கிடைப்பது கடினம். இறக்கும் தருவாயில் உள்ள மனிதனை அடையாளங்கண்டு, இதயத்தை எடுத்தவுடன் உடனே அடுத்தவர்க்குப் பொருத்த வேண்டும். அவ்வாறு அமைதல் மிகவும் அரிது.

ஆகவே உண்மையான இதயம் கிடைக்கும் வரையில் செயற்கை இதயத்தைப் பொருத்தி மரணத்தில் இருந்து விடுபடச் செய்வது இந்தத் தற்காலிக அறுவை சிகிச்சையின் நோக்கம். இந்தச் செயற்கை இதயத்தின் உதவியோடு அந்த நபர் தன் அன்றாட அலுவல்களை எந்த வித சுணக்கமுமின்றி செய்ய முடியும்.

செயற்கை இதயம் தனக்கு மிகுந்த புத்துணர்ச்சியையும், ஆரோக்கிய உணர்வையும் அளித்துள்ளது என்று ஸ்டன் தெரிவித்துள்ளார். புது ஜென்மம் எடுத்தது போல் உள்ளது என்றும் கூறினார்.

இத்தகைய இதய நோய் அறிகுறி ஏதுமின்றி திடீரெனத்தாக்க வல்லது. சில விளையாட்டு வீரர்களின் திடீர் மரணத்திற்குக் காரணம் இதுவே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை Arrhythmogenic right ventricular cardiomyopathy-ARVC என்று கூறுவர்.

டொமினிக்வெவும் இது போன்ற செயற்கைக் கருவியின் உதவியால் சிறிது காலம் சுவாசித்துக் கொண்டிருந்தார். பின்பு தகுந்த இதயம் கிடைத்தவுடன் இதய மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பக்கமும் பழுதடைந்த இதயமுள்ளோரைத் தற்காலிகமாக மரணத்தின் பிடியில் இருந்து விடுவிக்க இத்தகைய செயற்கை இதயம் உதவும், ஆனால் இது நிரந்தரத் தீர்வு ஆகாது. தகுந்த இதயம் கிடைக்கும் வரை சிறிது காலத்திற்கு இது மாற்றாகலாம்.

மருத்துவமனையிலேயே அதிக நாள் தங்குவதைத் தவிர்த்து 13.5 பவுண்டு எடையுள்ள பையை முதுகில் தாங்கி வழக்கம் போல நடமாட இந்தச் செயற்கை இதயம் உதவுகிறது என்றும் தனது வரிசைக்காகக் காத்திருப்பதாகவும் ஸ்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க