• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ். நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்ற திருச்சி பெண்

August 3, 2016 தண்டோரா குழு

செர்பியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான 16-வது உலக செஸ் போட்டியில், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் இந்திய சார்பில் திருச்சியைச் சேர்ந்த ஜெனித்தா ஆண்டோ என்பவர் கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் தனது முழு திறமையையும் காட்டிய அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதன்மூலம் உலகளவிலான போட்டிகளில் நான்காவது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து திருச்சி திரும்பிய அவரை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவருக்குப் பூங்கொத்துகள் கொடுத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனித்தா ஆண்டோ, ஊனமுற்றோருக்கான உலக செஸ் போட்டியில், 4வது முறையாகத் தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த மாதம் அஜர்பெய்ஜானில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க