• Download mobile app
31 Dec 2025, WednesdayEdition - 3612
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் – ஹபீஸ் சயீத்

November 8, 2016 தண்டோரா குழு

காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் என்று லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, ஜமா-உத்-தவா ஆகிய அமைப்புகளின் தலைவராக உள்ளவர் ஹபீஸ் சயீத். மும்பை தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ஹபிஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதுடன், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜமா-உத்-தவா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் பல்வேறு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு ஹபீஸ் சயீத் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஹபீஸ் சயீத் பேசியதாவது,

நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தப் போகிறோம்., காஷ்மீரில் தான் அந்த தாக்குதல் நடத்துவோம். இத்தாக்குதல் உலகத்தால் ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும் ஆனால் இந்தியா நடத்திய தாக்குதல் போல் இருக்காது காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு மென்மையாக நடந்து கொள்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க