• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமோசாவில் கின்னஸ் சாதனை முயற்சி

July 14, 2016 தண்டோரா குழு

உத்திரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ் பகுதி அருகே 10 பேர் கொண்ட குழு கின்னஸ் சாதனை படைப்பதற்காக உலகின் மிகப் பெரிய சமோசாவை தயார் செய்துள்ளனர்.

கின்னஸ் சாதனை படைப்பதற்காக ஒவ்வொருவரும் தங்களது திறமைகளைக் கொண்டு சாதனைப் படைத்தது வருகிறார்கள். இந்த வரிசையில் உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ் பகுதியில் உள்ள கோபால்நகர் காலணியைச் சேர்ந்த குழுவினர் சுமார் 332 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய சமோசாவை உருவாக்கியுள்ளனர்.

கோபால்நகரின் சாலையோரத்தில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார் ரிதேஷ் சோனி(20). கடந்த ஆண்டு கத்தாரியா பஜார் அருகே உள்ள ஒரு குழுவினர் உலகின் மிகப்பெரிய ஜிலேபியைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதில் கவரப்பட்ட சோனி சமோசாவில் கின்னஸ் சாதனை புரிய முடிவு 10 பேர் கொண்ட குழு மூலம் 332 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய சமோசா செய்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக லண்டன் பிராட்போர்ட் கல்லூரியில் தயாரிக்கப்பட்ட 110 கிலோ எடையுள்ள சமோசா தான் பெரிதாகக் கருதப்பட்டது. தற்போது சோனி குழுவினர் அதைக் கட்டிலும் 3 மடங்கு மிகப் பெரிய சமோசாவை தயாரித்துள்ளனர். இதையடுத்து
ரிதேஷ் சோனி தலைமையிலான குழுவினர் இவர்களது சாதனையை பதிவு செய்ய கின்னஸ் புத்தக குழுவினரை அணுகியுள்ளனர்.
இது குறித்து சோனி கூறும்போது,
சுதந்திரத்துக்கு பிறகும் படிப்பு, மின்சாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் எங்கள் சிறிய கிராமத்தின் மீது அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டதாகச் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 15 நாட்களாக இந்த சமோசாவை தயாரித்து வந்த இவர்கள், கடந்த திங்கட்கிழமையன்று இறுதி வேலைகளை முடித்து, மறுநாள் பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். இதனை ரம்ஜான் பண்டிகையின் போதே மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டதாகவும், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனதாகவும் சோனி கூறியுள்ளார்.

சுமார் 40,000 ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த சமோசாவை உருவாக்கிய குழுவினர் கேட்டரிங் சேவைகளில் உள்ள இளம் வயதினராம், அதிலும் 4 பேர் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களாம். இவர்கள் மட்டுமே இணைந்து 30,000 ரூபாய் சேர்த்ததாகவும், மீதி பணத்தை நன்கொடையாகப் பெற்றதாக சோனி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க