• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதங்களாக அதிகரிப்பு. முதல்வர் அறிவிப்பு

September 1, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.மேலும் சென்னையில் கூடுதலாக 100 சிற்றுந்துகளை இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வரும் தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பல்வேறு வாக்குறுதிகளை அதே விதியின் கீழ் அறிவித்து வருகிறார்.

அதில் அரசுப்பணியில் உள்ள மகளிருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியதை நிறைவேற்றும் வகையில் இன்று மகப்பேறு விடுப்பை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.இது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் படிக்க