• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடி படத்தை கிரிமினல் படங்களுடன் பிரசுரம் செய்த வழக்கில், கூகுள் நிறுவனம் மீது வழக்கு.

July 20, 2016 தண்டோரா குழு

உலகின் 10 கிரிமினல் என்று ஆங்கிலத்தில் கூகுளில் டைப் செய்து தேடினால் அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் முதல் 10 இடங்களில் இடம் பெறுகிறது.

இந்தச் சர்ச்சைக்குரிய பிரச்சனை பல மாதங்களுக்கு முன்னரே எழுந்து உள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞர் சுசில்குமார் மிஸ்ரா கூகுள் நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதி அதனை நீக்க வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், கூகுள் நிர்வாகம் பிரதமர் மோடியின் படத்தை அதில் இருந்து நீக்கவும் இல்லை அவரது கடிதத்திற்கு எந்தப் பதில் அளிக்கவும் இல்லை. தற்போது வரை அந்தப் பட்டியலில் நமது தேசத்தின் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது.

இது குறித்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுசில்குமார் மிஸ்ரா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் நமது நாட்டுப் பிரதமரின் படத்தைத் தவறான இடத்தில் பதிவு செய்தது நம் நாட்டு மக்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதற்குச் சமமாகும்.

எனவே கூகிள் நிறுவனம் உடனடியாக அதை நீக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கூகுள் மீதும், அதன் சி.இ.ஓ மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக சுசில்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க