• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழரை டூடுல் வைத்து பெருமைப்படுத்திய கூகுள் – யார் இவர் ?

October 1, 2018 தண்டோரா குழு

இணையஉலகின் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல தேடுபொறி நிறுவனம் கூகுள்.இந்நிறுவனம் டூடுல் என்ற பெயரில் தனது முகப்பு லோகோவை பிரபலமானவர்களின் பிறந்த நாள்,இறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின் போது அதற்கேற்றார் போல் மாற்றியமைப்பது வழக்கம்.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் இன்று இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளையொட்டி,கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

யார் இந்த கோவிந்தப்பா வெங்கடசாமி ?

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் அக்.,01, 1918ல் பிறந்தவர் கோவிந்தப்பா வெங்கடசாமி. பள்ளிப்படிப்பை எட்டயபுரத்தில் பயின்ற இவர்,மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பின்னர்,சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.பின்னர் ராணுவத்தில் சேர்ந்து அரசு மருத்துவராக பல்வேறு நாடுகளில் போர் நடந்த போது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சிகிச்சையளித்து வந்தார்.கண் மருத்துவத்தில் முதுகலையும்,கண் அறுவை சிகிச்சையில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.

தன் ஆன்மிக குரு ஸ்ரீ அரவிந்தரின் பெயரில் ‘அரவிந்த் ஐ கிளினி’க் என்ற 11 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையைத் தொடங்கினார்.இவர் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தும் பல முகாம்கள் நடத்தி லட்சக்கணக்கானோருக்கு கண்மருத்துவம் பார்த்திருக்கிறார்.

இதையடுத்து,இவரின் மருத்துவசேவையை பாராட்டும் விதமாக 1973ம் ஆண்டு இந்திய அரசின் பெருமைமிகு விருதான பத்மஸ்ரீவிருது அளித்து கவுரவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம்7ம் தேதி மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி மதுரையில் காலமானார்.

அரவிந்த்கண் மருத்துவமனை மூல ம்55 மில்லியன்மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டும் 6.8 மில்லியன் பேருக்கு கண் அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.இதில் பாதிக்கும் மேலானோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரவிந்த் மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் 40 லட்சம் கண் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.ஆறு லட்சம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.உலகில் தயாராகும் உள்விழி லென்ஸில் சுமார் 10 சதவீதத்தை ‘அரவிந்த் ஆரோ லேப்’ உற்பத்தி செய்கிறது.தினமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனைகளைத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க