உலகில் பெரும்பாலான மக்கள் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் சேவையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதையெடுத்து அதற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் “அல்லோ ” என்ற பெயரில் புதிய செய்தி Appஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் “டியூ” எனப்படும் வீடியோ கால் செய்வதற்கான ஆப் மற்றும் “அல்லோ” எனப்படும் செய்தி பரிமாற்ற App ஆகியவற்றை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருந்தது.
இதையெடுத்து கடந்த மாதம் “டியூ” சேவை முறைப்படி அறிமுகம்செய்தது கூகுள் நிறுவனம். அறிமுகம் செய்த ஒரு மாதத்திற்குள் பத்து லட்சம் பேர் அதனை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள் தற்போது “அல்லோ” செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.
பல சுவாரசியமான வசதிகளுன் உருவாக்கப்பட்டுள்ள இந்த “அல்லோ” Appல் வாட்ஸ்ஆப் போலவே ஸ்டிக்கர்ஸ் சாட்டிங், குரூப் சாட்டிங் செய்து கொள்ளலாம். இதில், சிறப்பம்சம் என்னவென்றால் சாட்டிங்கில் கூகுள்வசதி இணைக்கப்பட்டுள்ளதால் ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக சாட்டிங்கில் இருந்து வெளியே செல்லாமலேயே அதிலேயே “SEARCH” செய்து தெரிந்து கொள்ளலாம்.மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள் கணக்கை இத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.
ஆனால், Whatsappல் இடம் பெற்றுள்ள கோப்புகள் பரிமாற்றம் மற்றும் வாய்ஸ் கால் வசதி போன்ற வசதிகள் தற்போது இந்த செயலியில் இடம் பெறவில்லை. எனினும், வெகுவிரைவில் அந்த வசதிகள் “அல்லோ” ஆப்பில் இடம் பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல சுவாரஸ்யமான அம்சங்களுடன், “Gropup Chatting”, “Stickers”, செய்திகள் காலாவதியாகும் ஒரு ஆப்ஷனுடன் இந்த App தயாராகியுள்ளது. ஆனால், இதில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
Google தனது இந்த App-ஐ, “smart messaging app” என்கிறது. ஏனெனில், நீங்கள் செய்தியனுப்புவதிலிருந்து, நீங்கள் அனுப்ப இருக்கும் வார்த்தைகளை அது கற்றுக்கொள்கிறது.
மேலும், இதில் செய்திகளை மிகவும் ரகசியமானதாக்கலாம் மற்றும் உங்களுக்கு எப்பொழுது அது அழிக்கப்பட வேண்டுமோ, அந்த நேரத்தை அழிக்கவும் செய்யலாம். “Snapchat” -ஐ போலவே, புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, அதன் மேல் நீங்கள் எதையாவது எழுதி அனுப்பமுடியும்.
மேலும்,செய்திகளை அனுப்பும்போது கூகுள் செய்வதற்கான ஆப்ஷனும், App-இன் அடிக்கோட்டில் அளிக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை