October 14, 2017
தண்டோரா குழு
கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த கொலையாளிகளின் வரைபடம் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலை சம்பந்தமாக பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.இந்த கொலை சம்பந்தமாக விசாரிக்க பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது.
இந்நிலையில்,கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவினர், சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.