• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்கும்

November 15, 2018 தண்டோரா குழு

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,

“தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்,சென்னைக்கு தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும்,நாகைக்கு தென் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும் கஜா புயல் நிலை கொண்டுள்ளது.14 கிமீ ஆக இருந்த கஜா புயலின் வேகம் தற்போது 18 கிமீ ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல்,இரவு 8:00 மணி முதல் 11:00 மணி வாக்கில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கக் கூடும்.புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதனால் நாகை,கடலூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,திருவாரூர்,காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது” என்றார்.

கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் அரசு சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும்,கஜா புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 4மணிக்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க