• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முழுப் பாத்திர நூடுல்ஸை தனி ஆளாக உண்ட சீன தீயணைப்பு வீரர்

July 29, 2016 தண்டோரா குழு

சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு முழுப் பாத்திரம் முழுவதும் இருந்த நூடூல்ஸை சாப்பிடும் காட்சி இணையதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த இளைஞர் ஒரு தீயணைப்பு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது ஊரிலும் கூட நூடுல்ஸ் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் நூடூல்ஸை உயிர் போல நேசிக்கும் சீனர்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. ஏனெனில் அந்த அளவுக்கு அவர்கள் நூடுல்ஸின் ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த பூ வென்மிங் என்னும் தீயணைப்புப் படை வீரரின் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால் அவர் ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்த நூடூல்ஸ் முழுவதையும் ஒரே மூச்சில் சாப்பிடுவதை சக ஊழியர்கள் படம் பிடித்துள்ளனர்.

இதைப் புகைப்படத்தை இணைய தளமான பேஸ்புக்கில் பதிவாகியுள்ளது. இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இதற்குப் பல லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும், ஒரு தீயணைப்புப் பணிக்காக போய் விட்டுத் திரும்பிய பிறகு வென்மிங் உள்ளிட்ட சக வீரர்கள் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது சரியான பசியில் இருந்துள்ளார் வென்மிங். அதனால் இப்படி ஒரு முழுப் பாத்திரத்தில் இருந்த நூடுல்ஸ் முழுவதையும் அவர் ஒரு கை பார்த்து விட்டாராம்.

முதலில் வழக்கம் போலத்தான் சாப்பிட்டுள்ளார். ஆனால், அவருக்குப் பசி தீரவில்லை என்பதால் அருகில் இருந்த பாத்திரத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்து விட்டார். பின்னர் பாத்திரத்தை காலி செய்து விட்டுத்தான் அங்கிருந்து எழுந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருந்தது சிறிதும் ஓய்வு இல்லை. பசி வேறு பயங்கரமாக இருந்தது. இதனால் தான் அவ்வளவையும் சாப்பிட்டுவிட்டேன். இதில் தவறு ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

இப்படி வெறித்தனமாக நூடூல்ஸை சாப்பிட்ட வென்மிங், அதற்கு முன்பு 2 நாட்கள் ஓய்வே எடுக்காமல் வேலை பார்த்தார் என்று அவரது சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க