• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா பதவியேற்புக்காக ஒரு ரூபாய்க்கு ஆட்டோ ஒட்டியவர்.

May 23, 2016 தண்டோரா kulu

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் இன்று பதவியேற்றதை தொடர்ந்து, இன்று முழுவதும் தனது ஆட்டோவில் பயணம் செய்தவர்களிடம் ரூ.1 மட்டுமே வசூல் செய்துள்ளார் அ.தி.மு.க விசுவாசி.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆர்.எம்.மதிவாணன், பல வருடங்களாக அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடித்ததைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், இவருடன் சேர்ந்து 28 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றனர்.

அ.தி.மு.கவின் இந்த வெற்றியைப் பலரும் பல்வேறு வகையாகக் கொண்டாடி வரும் பொது மதிவாணன் சற்று வித்தியாசமாகக் கொண்டாட நினைத்தார்.

இதையடுத்து இன்று ஒருநாள் தனது ஆட்டோவில் பயணித்தவர்களிடம் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் 1 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படும் என அறிவித்தார்.

அறிவித்தது மட்டுமின்றி அவர் அப்படியே அனைவரிடமும் வசூலித்தும் வந்தார்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் மதிவாணன் கூறுகையில், நான் கடந்த 40 ஆண்டுகளாக அ.தி.மு.கவின் விசுவாசியாக இருந்து தொண்டனாக பாடுபட்டு வருகிறேன்.

இன்று 6 வது முறையாக ஜெயலலிதா அவர்கள் முதல்வராகப் பதவியேற்பதை கொண்டாடும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோவையில் பயணிகள் எங்கு ஏறி, இறங்கினாலும் வெறும் 1 ரூபாய் மட்டும் செலுத்தி பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து காலை முதல் பயணம் செய்த அனைத்துப் பயணிகளிடமும் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்தேன்.

இதனால் எனக்கு பொருளிழப்பு ஏற்படுவதாக அனைவரும் என்னைக் கிண்டலடித்துள்ளனர் ஆனால் இதை நான் எனது இதய தெய்வத்திற்கு செலுத்தும் காணிக்கையாக நினைக்கின்றேன் என உணர்ச்சிவசப்பட்டார்.

மேலும் கூறும்போது, ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைத்தவுடன் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என நினைத்தே இந்த முடிவை எடுத்தேன் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக அவர் இவ்வாறு செய்வதை செய்தியாக வரவேண்டாம் என நினைத்ததாகவும், பின்னர் நண்பர்கள் வற்புறுத்தலின் பிறகே இதைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இது போன்ற தொண்டர்கள் இருப்பதாலேயே பல கட்சிகள் உண்ணும் இருக்கின்றன என்பது மட்டும் உண்மை.

மேலும் படிக்க