• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் சுவாதி ஆப்ஸ்

July 14, 2016 தண்டோரா குழு

மென்பொறியாளர் சுவாதி சென்னையில் கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த “சுவாதி மொபைல் அப்ளிகேஷன்” என்ற ஆப்ஸை விரைவில் அறிமுகம் செய்ய ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த மொபைல் அப்ளிகேஷனை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து சுவாதி பணியாற்றிய இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்குகிறது. ரயிலில் பயணிக்கும் பெண்கள் தங்களுக்கு எந்த நேரத்தில் உதவித் தேவைப்பட்டாலும் இந்த மொபைல் ஆப்பில் இருக்கும் SOS என்ற பட்டனை அழுத்தினால், அந்த அழைப்பு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் அதிகாரிகளின் மொபைல் குழுவுக்கும் வரும்.

அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் பல குழுக்களை இது அலர்ட் செய்வதால், உடனடி நடவடிக்கையில் இறங்க வசதியாக இருக்கும். அருகிலுள்ள இரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு ஒருசில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். இந்த “ஆப்” புக்கு சுவாதியின் பெற்றோரின் அனுமதி கேட்டு அவர்கள் அனுமதியுடன் சுவாதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க