• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்விக்காக உடலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பெண்கள். அதிர்ச்சிகர தகவல்.

July 8, 2016 தண்டோரா குழு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கல்விக்காகச் சிறுமியர் முதல் இளம் பெண்கள் வரை தங்களது உடலை விற்று பணம் தேடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பள்ளிகளில் கட்டணமாக ஆண்டுக்கு 40 பவுண்ட்கள் வரை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏழ்மையின் காரணமாகவும், அடிப்படை கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என்பதாலும் பெரும்பாலான இளம் வயது பெண்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் இருப்பதால் சில பெண்கள் முழுநேர விபச்சாரத்தில் ஈடுபடும் கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிப்படிப்புக்கான கட்டணத்தை செலுத்துவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியரையும் இளம் வயது பெண்களையும் சீரழிக்கும் அவல நிலையும் இங்கு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனந்ட்டா என்னும் சிறுமி தன்னுடைய பள்ளிப்படிப்புக்காக இரவில் விபசாரத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகக் கூறினாள். மேலும், தனக்கு உணவும் பள்ளி கட்டணத்தையும் தருவதாக வாக்களித்த ஒருவனை நம்பி இந்தத் தொழிலில் ஈடுபட ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று என்றும், கர்ப்பம் தரிக்காமல் இருக்க பாதுக்கப்பு முறையைக் கையாண்ட போதிலும் தான் ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவள் தெரிவித்தாள்.

மேலும் இதனால் தான் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும், மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தாள்.

போதிய விழிப்புணர்வு இல்லாமையால் கருத்தரிக்க நேரிடும் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆண் சமூகம் கைகழுவுவதும், இதனால் தமது குழந்தைக்கும் தமக்கும் என மிகக் குறைவான ஊதியம் பெறும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திலும் பெண்கள் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குள்ள பல இளம் வயது பெண்களும் இரவில் பாலியல் தொழில் செய்துவிட்டு பகலில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளாக உள்ளனர். இரவு முழுவதும் கண்விழித்தால் ஒரு இளம் வயது பெண்ணால் 9 பவுண்ட்கள் வரையே ஈட்ட முடியும் என்ற நிலையில், அந்த 9 பவுண்ட் பணத்தில் உணவு, உடை, புத்தகம், பள்ளி சீருடை மற்றும் கல்வி கட்டணம் என அனைத்தையும் சமாளித்தாக வேண்டும்.

இது போன்ற நிலையில் தவிக்கும் இளம் வயது பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் அமைப்பு ஒன்று தெருவோர குழந்தைகள் என்ற இயக்கத்தின் வாயிலாக மகளிர் கல்வியை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

ஒட்டுமொத்தமாக 20,000 சியரா லியோன் சிறுமிகள் முதல் இளம் வயது பெண்களுக்கு கல்வியை உறுதி செய்வதுடன் அவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கவும் இந்த அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க