November 10, 2017
தண்டோரா குழு
கூகுள் நிறுவனம் ஃபைல்ஸ் கோ (Files Go) என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.
“Files Go” என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் பயனர்கள் கோப்புகளை நிர்வகிக்க உதவுவதற்காகவும், அவர்களுடைய போன்களிலிலுள்ள பயன்படுத்தாத செயலிகள் மற்றும் நகல் புகைப்படங்கள் போன்ற சேமிப்பு கழிவுகள் ஆகியவற்றை தானாகவே கண்டுபிடித்து, வெளியேற்றுவதற்கும் “Files Go” வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய மொபைல் அப்ளிகேஷனின்
இணையதள இணைப்பு இல்லாமல், மற்ற போன்களின் கோப்புகளை அனுப்பவும் பெறவும் முடியும்.
தற்போது, “Files Go”கோப்புகள் Play Store ல் Beta வெர்சனாக கிடைக்கிறது. ஆனால் இதன் இறுதி பதிப்பு எப்போது வெளியிடப்படும் என்று கூகுள் நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை.