October 14, 2017
தண்டோரா குழு
ஃபேஸ்புக் மூலம் உணவை ஆர்டர் செய்யும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இணையதளமான ஃபேஸ்புக்கை சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் பல புதிய சேவைகளை அவ்வப்போது அறிமுகம் செய்து,பயனாளர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டில் இருப்பவர்கள், ஃபேஸ்புக் இணையதளம் மூலமாகவோ அல்லது கைபேசியில் இருக்கும் ஃபேஸ்புக் செயலி மூலம் உணவு விடுதிகளிருந்து உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய சேவையை நேற்று(அக்13)முதல் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் பேஸ்புக் இணையதளத்திலிருக்கும் “எக்ஸ்ப்ளோர்” மெனுவில் இருக்கும் “உணவு ஆர்டர் செய்யும்” பிரிவுக்குச் சென்று, அங்கிருக்கும் உணவு விடுதிகள் பட்டியல் காணப்படும் பயனாளர்கள் விரும்பும் உணவை ஆர்டர் செய்யலாம்.