October 13, 2018
தண்டோரா குழு
ஃபேஸ்புக்கில் 3டி புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி அறிமுகமாகிறது.உலகில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். அதற்கு ஏற்ப பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டே தான் வருகிறது.அந்த வரிசையில் தற்போது பேஸ்புக் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
டூயல் லென்ஸ் கேமராவில் போர்ட்ரேய்ட் ஆக வைத்து எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி,அதனை பல்வேறு அடுக்குகளாகப் பிரித்து 3டி புகைப்படத்தை பயனாளரே உருவாக்கலாம்.ஃபேஸ்புக்கில் உள்ள மெனுவைக் குறிக்கும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து 3டி போட்டோவை உருவாக்கும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். புகைப்படத்தில் உள்ள பின்னணி,நபர்,தரை உள்ளிட்டவற்றை தனி தனி அடுக்குகளாகப் பிரித்து அவற்றின் கோணங்களையும்,அவற்றுக்கு இடையே உள்ள ஆழத்தையும் மாற்றி,முப்பரிமாண முறையில் இயக்கலாம்.
குறிப்பாக 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள்,இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை கணக்கிடும்,பின்பு உங்கள் புகைப்படத்தை போர்ட்ரெயிட் மோடில் எடுத்து,அதை 3டி புகைப்படமாக பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும்.பின்பு இந்த வசதியின் மூலம் உங்கள் புகைப்படத்தை ஸ்கிரால் செய்தும்,பேன் அல்லது டில்ட் செய்தும் படத்தை உண்மையில் 3டி-யில் பார்க்க முடியும்.குறிப்பாக ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஃபயர்பாக்ஸ் இர் ஆகுலஸ் ரிஃப்ட் உள்ளிட்டவற்றில் 3டி புகைப்படங்களை பார்க்க முடியும்.
இந்த அம்சம் கடந்த மே மாதம் நடைபெற்ற எஃப்8 நிகழ்வில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்தது.ஆனால்,இப்போது வந்த அறிவிப்பில் வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.