• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறு ஜென்மத்துடன் அதிர்ஷ்டத்தையும் அடைந்த பெண்

August 4, 2016 தண்டோரா குழு

இங்கிலாந்தைச் சேர்ந்த சோனியா டேவிஸ்(53) என்பவருக்குத் தொண்டையில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டதை அடுத்து அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் உயிர்பிழைத்தார்.

இந்நிலையில் மூன்றாவது நாள் தன்னுடைய மூத்தமகள் ஸ்டெபானேவை(23) அழைத்து உடனடியாக யூரோமில்லியன்ஸ் லாட்டரி டிக்கெட்டை வாங்கு எனக் கூறியுள்ளார். இந்த நேரத்தில் எதற்கு எனக் கேட்ட மகளிடம் நான் மரணத்தையே ஏமாற்றிவிட்டுப் பிழைத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என நினைக்கிறேன். எனவே உடனடியாக வாங்கு எனக் கூறியுள்ளார்.

ஆனால் அவர் தன்னுடைய ஆண் நண்பருடன் வெளியே ஊர் சுற்ற கிளம்பியுள்ளார். பின்னர் இருவரும் ஒரு போக்குவரத்து நெரிசலில் மாட்டியதால் அவர் இறங்கி அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதுவும் வெறும் குலுக்களுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர் அந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

இதையடுத்து அவர் அதன் முடிவையும் பார்த்தபோது அந்த டிக்கெட்டுக்கு முதல் பரிசான 6.1கோடி ரூபாய் அடித்துள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்தப் பரிசை சோனியா, அவரது ஆண் நண்பர், இரு மகள்கள் மற்றும் மூத்த மகளின் ஆண் நண்பர் ஆகியோர் சமமாகப் பிரித்துக்கொண்டனர்.

மேலும் இது குறித்து கூறிய சோனியா, நான் உயிர்பிழைத்ததே அதிசயம் என்ற நிலையில் தற்போது அதிஷ்டத்தின் மூலம் கோடீஸ்வரி ஆனது மிகவும் சந்தோசமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்தாண்டில் அதிக தொகை வெற்றி பெற்ற நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க