• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய வம்சாவளி லார்ட் குமார் பட்டாச்சார்யா விற்கு ராணி எலிசபத் பாராட்டு.

June 13, 2016 தண்டோரா குழு

அரச பரம்பரையால் உருவாக்கப்பட்ட இந்த சிறந்த பேராசிரியர் விருது ராஜபரம்பரையின் சிறப்புரிமையாகும். மந்திரிகளின் ஆலோசனைப்படி ராணியின் மேற்பார்வையில் இவ்விருதுக்குத் தகுந்தநபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இம்முறை இவ்விருதைப் பெற்றவர் லார்ட் குமார் பட்டாச்சார்யா என்ற தொழில்துறை முன்னோடி. இங்கிலாந்திலுள்ள வார்விக் மாவட்டத்தில் ஒரு பெரிய உற்பத்திக் குழுவை உருவாக்கிய பெருமை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரைச் சேரும். சுமார் 35 ஆண்டுகளாக உழைக்கும் தமது தொழில் நண்பர்கள் அனைவருக்கும் இப்பெருமை சேரும் என்று தெரிவித்துள்ளார்.

IIT காரக்பூரில் படித்த இவர் ஏட்டுப் படிப்பிற்கும் நடைமுறை செயலுக்கும் காணப்படும் இடைவெளியை குறைக்க வேண்டும், மக்களின் திறமையை முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும், ஆராய்ச்சிகளின் மூலம் முன்னேற்றத்தை வலுப்படுத்தவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

இவரது பணிக்காலம் முழுவதும் UK அரசுக்கு ஆக்கபூர்வமான தொழில் நுட்ப நுணுக்கங்களைப் பற்றியும், பயிற்சிமுறை பற்றியும், புதிய கண்டுபிடிப்புகளையும் பரிந்துரை செய்து வந்துள்ளார். பிரதம மந்திரி மார்கெரட் தாச்சர், டோனி பிளேயர் ஆகியோரிடமும் இவர் தொழில் தொடர்பு வைத்திருந்தார்.

இவருடைய WMG உற்பத்திக்குழு அறிவு சார்ந்த ஆராய்ச்சியின் பலனாக, உற்பத்தியைப் பெருக்குவதில் முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. உலகளவில் பல நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தொழில் புரிவதன் மூலம் சமூக அந்தஸ்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இயலும் என்பது இவரது கணிப்பு. பல ஆராய்ச்சிகளின் மூலம் நவீன தொழில் நுட்பங்களையும் புகுத்துவதிலும் வல்லவர்.

இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி காரக்பூரில் ரசாயனப் பேராசிரியர் இவரது தந்தை. டாக்காவில் பிறந்த இவர் ஒரு இந்திய பிரிட்டிஷ் மெக்கானிக்கல் இஞ்ஜினியர் ஆவர். கடந்த 1980ம் ஆண்டு வார்விக் பல்கலைக் கழகத்தில் உற்பத்தித்துறையின் பேராசியராகப் பணியாற்றினார். அந்தகால கட்டத்தில்தான் இவர் WMG குழுவை நிர்மாணித்தார்.

இக்குழுவின் செயல்திட்டம், வியாபாரம், தொழிற்சாலை, நிதித்துறை, பொருளாதாரம், கல்வித்துறை, சர்வதேச விஷயங்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற பல பகுதிகளையும் உள்ளடக்கியது.

இந்திய நிர்வாகங்களான டாடா மோட்டார்ஸ், டி.வி.ஸ், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி போன்றவைகளுடன் இணைந்து வாகனத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை தொடருவதே இவரது அடுத்த இலக்கு. புதிய தலைமுறைக்கு உதவியாக இருக்கும் இந்த முயற்சி 2017ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க